கனடாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டியான ரீட்டா ஜார்ஜெப், கனடா-அமெரிக்காவை இணைக்கும் புதிய கார்டி ஹோவ் சர்வதேச பாலத்தை நடந்து கடந்து சாதனை படைத்துள்ளார். பாலக் கட்டுமான தாமதத்தால் 2 ஆண்டுகள் காத்திருந்து தனது நீண்ட நாள் ஆசையை தன்னந்தனியாக நடந்து நிறைவேற்றினார். 1929-ல் அம்பாசிடர் பாலம் திறக்கப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், வயது என்பது வெறும் எண்தான் என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
