பிசியோதெரபி மருத்துவ வசதிகளை தமிழக அரசு பரவலாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். நாளை (செப்..8) உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, அவர் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வேலையில்லா பிசியோதெரபி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்தல், தற்காலிக மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்தல் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல் ஆகிய கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
