Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமநாதபுரத்தில் 10, 11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!

ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் நிகழ்ச்சியை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 10, 11 ஆகிய இரு நாட்களும் டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் மற்றும் நகரில் எதிர்வரும் 11.09.2026 அன்று நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் நிகழ்ச்சியினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் பொருட்டு 10.09.2026 மற்றும் 11.09.2026 (வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் முழுமையாக மூடி வைத்திட ஆணையிடப்படுகிறது.

மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்”

error: Content is protected !!