Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

தஞ்சாவூர் அரண்மனை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று நடைபெற்றதை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் தேர்வுமையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திடஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

2022-23ம் கல்வியாண்டில் அரசுப் பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெறவேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களைபெறவேண்டும் எனவும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!