Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாக்கள் மூலம் தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தி அதில் 2023ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்களும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தன.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,எதிர்க்கட்சிகளின் சுயநலமிக்க அரசியலால் நாட்டில் மகளிரின் முன்னேற்றத்திற்கான போராட்டம் முடக்கப்பட்டுள்ளது. நாட்டு மகளிரிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். மகளிரின் கனவுகள் சிதைக்கப்பட்டதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தனர்.

நமது பெண் சக்திக்கு எதிரான நடவடிக்கையை காங்கிரஸ் , திரிணாமுல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக எவ்வாறு கொண்டாடின என்பதை நாட்டு பெண்கள் பார்த்தனர். மகளிர் இடஒதுக்கிட்டை எதிர்த்து எதிர்க்கட்சியினர் பாவம் செய்துவிட்டனர். இதற்காக எதிர்க்கட்சியினர் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பெண் சக்திக்கு சிறகுகள் வழங்க மசோதா கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தோற்கடித்து அரசியலமைப்பு சாசனத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டன’ என்றார்.

error: Content is protected !!