மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக வேறு சாக்கு பையில் மாற்றி லாரிகள் மூலம் கடத்தல், கையும் களவுமாக பிடித்த வீத லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த நபர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.
கரூர் மாவட்டம்,கடவூர் ஒன்றியம், செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டி அருகே, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசின் யூரியா உர மூட்டைகளை, வேறு சாக்கு

பைகளில் மாற்றி தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கடத்த முயற்சி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த We The Leaders அமைப்பினர், காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இரவு நேரத்தில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, லாரியில் உர மூட்டைகளை பை மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் உரங்கள் முறைகேடாக

தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வீத லீடர்ஸ் அமைப்பை கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகளுக்கு சேர வேண்டிய உரங்கள் அவர்களுக்கே முறையாக சென்றடைவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
