கரூர் அருகே குடிநீர் பைப்பலைனில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதாக புகார் – காலி குடங்களுடன் புகார்
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளபாளையம் ஊராட்சியில், அருந்ததியர் தெருவில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக தனியாக குடிநீர் பைப்பலைன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக் குடிநீர் பைப்பலைனில் சிலர் சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் தங்களது பகுதிக்கு கடந்த பல மாதங்களாக போதிய குடிநீர் கிடைக்கவில்லை என்றும்,

குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்த பொதுமக்கள், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பொதுக் குடிநீர் பைப்பலைனில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அருந்ததியர் தெருவிற்கு தனியாக புதிய குடிநீர் பைப்பலைன் அமைத்து சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
