Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“6ம் அறிவு இல்லாத தவெக!” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு இளைஞர்களை தவெக ஏமாற்றி வருகிறது. அடிப்படை புரிதலே இல்லாதவர்கள். இவர்களுக்கு வாக்களித்தவர்கள் எதன் அடிப்படையில் வாக்களித்தார்கள் என்று தெரியவில்லை. தாய்மொழி தமிழே பேச தெரியாத ஆறாம் அறிவே இல்லாதவர்களாக தவெகவினர் உள்ளனர். காமராஜர் பல்கலை கழகத்தையே மீண்டும் அரசுக் கல்லூரியாக மாற்ற வேண்டும் என சட்ட மன்றத்தில் கூறுகிறார்கள்.

முதலமைச்சர் முதல் அனைவரின் சாயமும் வெளுப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. பேப்பரில் எழுதி வைத்திருப்பதை கூட ஒழுங்காக பேச முடியவில்லை. ஆதவ் அர்ஜுனா பெரிய சாக்ரடீஸ் போல பேசுகிறார். மில்லி லிட்டர் பாலை மீட்டர் என்கிறார். பாமரர்களுக்கு தெரிந்தது கூட இவருக்கு தெரியவில்லை.

நிதி அமைச்சர் மரிய வில்சன் மதத்தை இழுத்து விடுகிறார். கோர்ட்டுக்கு செல்ல பயந்து நீதிமன்றம் இவரை கண்டிக்கிறது. அவரது அண்ணனை கட்டையை வைத்து அடிக்கும் வீடியோ வருகிறது. ஆறாம் அறிவு இருக்கிறதா என்பதுபோல தான் தவெகவின் செயல்பாடு உள்ளது.ஆளுங்கட்சியாக வந்துவிட்டோம் என்று தலைகால் புரியாமல் எதிரில் உள்ள மூத்த உறுப்பினர்களை உதாசீனப்படுத்தி பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!