தெலங்கானா மாநிலம் வாரங்கல்லைச் சேர்ந்த அகிலா (20) என்ற பெண், குழந்தை அழுததால் கணவர் ஹுசைனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். வேலையில் இருந்த கணவர் அழைப்பை எடுக்காததால் ஆத்திரமடைந்த அகிலா, எலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
