2027 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தலா ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரொக்கப் பரிசு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை எழுந்துள்ளது. போதிய மழையின்மையால் குறுவை சாகுபடி பொய்த்து டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் தொகுப்பிற்கான கரும்பை அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
