தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையம் கடந்த 15-நாட்களுக்கு முன்பு இழுத்து மூடப்பட்ட நிலையில் நல்லிச்சேரி, பசுபதிகோவில் பகுதிகளில் அறுவடை

செய்யப்பட்ட் சுமார் 6000 நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர்.
இப்பகுதியில் மாலை நேரங்களில் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் விவசாயிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். மேலும் கொள்முதல் நடைபெறாததால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல்மணிகள் அறுவடை செய்யாமல் இருந்து வருவதாகவும். எனவே நல்லிச்சேரி நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் எனவும், தாமதிக்கும் பட்சத்தில் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்..
