மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 16ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது; அதனை தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீது செப்டம்பர் 17ம் தேதி பரிசீலனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற செப்டம்பர் 19ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
