மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது மற்றும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் புறக்கணிக்க முடியாத கட்டாயத்தில் திமுக உள்ளது. இந்த நிலையில், தேர்தல் வியூகம், தவெக அரசுக்கு எதிரான பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஸ்டாலின் கேட்டறிகிறார்.
