வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் தூத்துக்குடியில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய உப்பு உற்பத்தி தொழிலை அழிக்கும் கப்பல் கட்டும் தள திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஒரு தொழிலை அழித்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறித்துவிட்டு மற்றொரு தொழிலை உருவாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
