Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு; இங்கிலாந்தில் 1,000 விமானங்கள் ரத்து

மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு; இங்கிலாந்தில் 1,000 விமானங்கள் ரத்து

லண்டன் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் வான்வெளியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டின் தேசிய வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் ஒட்டுமொத்தமாக முடங்கின.

இதனால் ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், மான்செஸ்டர், பர்மிங்காம் மற்றும் ஸ்காட்லாந்து உள்ளிட்ட 15 முக்கிய விமான நிலையங்களில் 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களிலும், ஓடுபாதையில் நின்ற விமானங்களுக்குள்ளும் பல மணி நேரம் உணவு மற்றும் போதிய வழிகாட்டலின்றி தவித்தனர்.

குறிப்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்த நிலையில், ரையான்ஏர் நிறுவனத்தின் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். மாலையில் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், விமானங்கள் அடுத்தடுத்து ரத்தானதன் தாக்கம் ஐரோப்பா முழுவதும் எதிரொலித்துள்ளதாகவும், நிலைமை சீரடைய சில நாட்கள் ஆகும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

error: Content is protected !!