ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்தும், நிதி நெருக்கடிகளைச் சந்தித்தபோதும், தெலங்கானாவின் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவு நேரக் காவலாளியாகப் பணிபுரிந்தபடியே M.Com, B.Ed, M.Ed பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். தொடர் முயற்சியால், குருகுல் கல்வி நிறுவனங்களில் இளநிலை விரிவுரையாளர், முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் என 3 அரசுப் பணிகளை ஒரே நேரத்தில் பெற்றுள்ளார். “பொறுமையுடன் காத்திருந்து சீராகப் பயின்றால், வெற்றி நிச்சயம்” என்று அவர் கூறியுள்ளார்.
