கன்னட நடிகர் கிரண் ராஜை சிங்கம் ஒன்று தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அத்தகவல் உண்மையல்ல என கிரண் ராஜ் விளக்கமளித்துள்ளார். அந்த சிங்கம் குட்டியாக இருந்தபோதிலிருந்தே தமக்கு தெரியும் என்பதால் இருவருக்கும் இடையே நீண்டகால பழக்கமும் பாசமும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வீடியோவில் காணப்படுவது போல சிங்கம் தன்னை தாக்க வரவில்லை என்றும், மாறாக தன்னை பாசத்தோடு கட்டியணைக்கவே வந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
