போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்புகள்:
பயணியரின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், நிகழ்நேரக் கண்காணிப்பை மேம்படுத்தவும், 13,490 அரசு பஸ்களில், வாகன இருப்பிடக் கண் காணிப்புக் கருவி பொருத்தப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களின், 35.03 ஏக்கர் பரப்பளவிலான பணிமனைகள் மற்றும் பஸ் முனையங்கள் வாயிலாக, ஆண்டுக்கு 124.28 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வகையில், பொது- – தனியார் கூட்டாண்மை முறையில், நவீன பயணியர் வசதிகள் மற்றும் வணிகப் பயன்பாடுகள் உருவாக்கப்படும் சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்கும் வகையில், 10,524 புறநகர் பஸ்களின் இரு புறங்களிலும் பக்கவாட்டு பாதுகாப்பு அரண்கள் பொருத்தப்படும்
சென்னை மாநகர் போக்கு வரத்துக் கழகத்தில், 7 ஆண்டுகள் பழமையான, நல்ல நிலையில் உள்ள 100 டீசல் பஸ்கள், மின்சார பஸ்களாக மாற்றப்பட்டு, தனியார் பங்களிப்புடன் இயக்கப்படும்.
போக்குவரத்துக் கழகங்களில் சிறப்பாகப் பணியாற்றும் 8 ஓட்டுநர்கள் மற்றும் 8 நடத்துநர்கள் என, மொத்தம் 16 பேர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, தலா 50,000 ரூபாய் ரொக்கப் பரிசும் விருதும் வழங்கும் திட்டம், 10 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்து சேவை, 9,536 புறநகர் பஸ்களில் அறிமுகப்படுத்தப்படும்.
இதன் வாயிலாக, ஆண்டுக்கு கூடுதலாக, 28.60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பள்ளி நேரங்களுக்கு ஏற்ப, காலை மற்றும் மாலை நேரங்களில், 140 பள்ளி களை சேர்ந்த 19,000 மாணவர்கள் பயனடையும் வகையில், சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.
தமிழகம் முழுதும் பயணியரின் எளிதான, விரைவான மற்றும் பாதுகாப்பான கட்டண பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த, தற்போது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் நடைமுறையில் உள்ள, ‘சிங்கார சென்னை’ தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில், சாலைப் போக்குவரத்து நிறுவனம் வாயிலாக, இரு சக்கர வாகனம், இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிகள், குறைந்த கட்டணத்தில் ஆண்டொன்றுக்கு, 3,000 பேருக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
