Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

847 மூட்டைகளில் 35,115 கிலோ பதுக்கல் உரம் பறிமுதல்-3 பேர் கைது

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் அவர்களின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி வட்‌டகரூர் அலகு காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உணவு பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக ரோந்து அலுவலில் இருந்த போது கிடைத்த தகவலின் பேரில் கரூர் மாவட்டம, கடவூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா புகார் அளித்த நிலையில் அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா DAP உரம் 847 மூட்டைகளில் 35,115 கிலோ உரத்தினை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக உரம் மற்றும் லாரியை கைப்பற்றி கொடுத்த புகாரை பெற்று கரூர் கொடுமை பொருள் வழங்க துறையில் வழக்கு பதிவு செய்து குடோன் உரிமையாளரான கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா செம்பியநத்தம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் தங்கவேல் மற்றும் Ashok Layland லாரி உரிமையாளரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில் முருகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கரூர் மாவட்ட சிறையில் அடைத்தனர் மேலும் இந்த குற்ற செயலில் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!