சவூதி அரேபியாவின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சவூதியின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கு அமைதியை சீர்குலைக்கும் இத்தாக்குதல்கள் கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
