ஜெகன் மோகன் ரெட்டி மாநிலம் தழுவிய அளவில் பாதயாத்திரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நோக்கில் இந்த யாத்திரை அமையும் என பேசினார். 2017-ல் அவர் மேற்கொண்ட பிரஜா சங்கல்ப யாத்திரை ஆந்திராவில் YSRCP கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இண்டியா கூட்டணியில் ஜெகன் இணையவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
