தெலங்கானா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 22 MLA-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். BRS பெண் MLA-களுக்கு எதிரான போலீஸாரின் அத்துமீறல், சந்திரசேகர ராவ் குறித்த அநாகரிக கருத்துகள் தொடர்பாக அக்கட்சி MLA-க்கள் விவாதிக்க கோரினர். தொடர்ந்து அவையின் மையப்பகுதிக்குள் நுழைந்தும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து KT ராமாராவ் உள்பட 22 BRS MLA-க்களும் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
