Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டம்

கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், மூன்றாவது நாளாக பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்.

கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அரசாணை எண் 62-ன் படி ஊதியம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் போனஸ் வழங்க வேண்டும் ,பணிச்சுமையை குறைக்க வேண்டும், வாரத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், தரை குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 7-ஆம் தேதி முதல் கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர்கள், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!