திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெரு அருகில் கடந்த 1ந் தேதி இரவு ஒரு முதியவர் மயங்கி விழுந்து இறந்த கிடந்தார். இறந்த நபரின் பெயர் அருள் என மட்டும் தெரிய வந்தது. இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி இறந்து கிடந்த அருள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அருளை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காந்தி மார்க்கெட் போலிசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.
