அதிக சூடாக இருக்கும் டீ, காபி உள்ளிட்ட பானங்களை தொடர்ந்து குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை.
சுமார் 65 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும் பானங்கள், உணவுக்குழாய் செல்களின் உட்புற அடுக்கை சேதப்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருத்து.
அதனால், கொதிக்கும் சூட்டில் பானங்களை குடிப்பதை தவிர்த்து, சற்று ஆறிய பிறகு குடிப்பது பாதுகாப்பானது என அறிவுறுத்தல்.
