பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் பகத் சுனி லால், தனது 93 வயதில் இன்று காலமானார். அவரது மறைவு குறித்து அவரது மகன் மற்றும் மாநில அமைச்சர் மொஹிந்தர் பகத் அறிவித்தார். பகத் சுன்னி லால், 2012-ஆம் ஆண்டில் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணியில் அமைச்சராகப் பணியாற்றியவர். அவரது இறுதிச் சடங்குகள் மாலை 5 மணிக்கு ஜலந்தரில் நடைபெறும். அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பஞ்சாப் அரசு மாநிலம் முழுவதும் அரை நாள் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
