Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீலகிரியில் அதிரடி!- 900 சொகுசு விடுதிகளுக்கு சீல்

நீலகிரியில் அதிரடி!- 900 சொகுசு விடுதிகளுக்கு சீல்

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக சொகுசு விடுதியாக செயல்பட்டு வரும் கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டு வரும் சொகுசு விடுதி கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு அனுமதி பெற்று தாங்கும் விடுதியாக செயல்பட்டு வரும் கட்டிடங்களுக்கு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் முறையான அனுமதி இன்றி செயல்பட்டுவரும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள 900 கட்டிடங்கள் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கண்டறியப்பட்ட கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 900 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தற்போது சீல் வைக்கும் பணி நடைபெறு வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!