Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரம் பகுதியில் உயர் ரக பைக் திருட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது

காஞ்சிபுரம் பகுதியில் உயர் ரக பைக் திருட்டு-சிறுவன் உட்பட 3 பேர் கைது

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் முன்பும், தனியார் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களிலும் விலை உயர்ந்த பைக்குகள் திருடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

அதன்பேரில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை, போலீசார் ஆய்வு செய்ததில், ஒருவர் ஹெல்மெட் அணிந்தும் மற்றொருவர் தொப்பி அணிந்தும் உயர்ரக பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களில் கண்காணித்து அசால்ட்டாக திருடி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார், பைக் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பெரிய காஞ்சிபுரம், தாமல்வார் தெரு பகுதியில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார், நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் (18), திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, வாய்விடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், சுலபமான முறையில் திருடிச் செல்வதற்கு வசதியாக உள்ளதால்தான் உயர்ரக மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4 உயர்ரக பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கும், மற்ற இருவரையும் சிறையிலும் அடைத்தனர்.

error: Content is protected !!