கலிபோர்னியா மாகாணம் சேக்ரமெண்டோவில் உணவகப் பணியாளரான இந்தியப் பெண் ஷாலினி (38), ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததால் ரோகித் (22) என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். உணவக வாசலில் வாக்குவாதம் செய்து ஷாலினியைச் சுட்டுக் கொன்ற ரோகித், காரில் தப்பியோடினார். போலீசார் துரத்திய நிலையில், காரிலேயே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் தொல்லை: அமெரிக்காவில் இளம்பெண் துப்பாக்கி சூட்டில் பலி
