Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.


இந்தப் படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய்

கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

‘மூக்குத்தி அம்மன்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் முன்னணி ஓடிடி தளங்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை தியேட்டர்களில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் தியேட்டர் வெளியீட்டை நடிகை நயன்தாரா ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. பிரமாண்டம், உணர்வுபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ள இப்படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான மைல்கல்லாக இருக்கும் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

நகைச்சுவை, பிரமாண்டம், பேண்டசி போன்ற அம்சங்களின் கலவையாக இப்படம் ரசிகர்களை வலுவாக சென்றடையும் என்று படத்தில் டைரக்டர் சுந்தர் சி கருதுவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ 14ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் சற்றுமுன் வெளியானது.

error: Content is protected !!