Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை படையல்!

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை படையல். ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர்

சதுர்த்திவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை

முன்னிட்டு, உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் தென்கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான

சுவாமி கோயிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளன.

இந்தக் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்.14) தொடங்கி, செப்.27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க

விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, இரு விநாயகர்களுக்கும் பிரம்மாண்ட கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டது.

இதற்காக கோயில் மடப்பள்ளியில் தேங்காய்ப்பூ, பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, சுமார் 24 மணி நேரத்திற்கு முன்பே சுடுநீர் ஆவியில் வேகவைத்து 150 கிலோ எடையிலான கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

பின்னர், தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டையை கோயில் பணியாளர்கள் துணியில் தொட்டில் போல கட்டி, மடப்பள்ளியில் இருந்து தூக்கிச் சென்றனர். முதலில் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. தொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திருச்சி மட்டுமின்றி, அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். படையலிடப்பட்ட பிரம்மாண்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் பா.சீனிவாசன் தலைமையில், அறங்காவலர்கள் மற்றும் கோயில் உதவி ஆணையர் க.அருட்செல்வன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

error: Content is protected !!