கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கறிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீண்டாமைக் கொடுமை அரங்கேறியுள்ளது. விநாயகர் சிலையைத் தங்களது ஊருக்குள் கொண்டு வரக்கூடாது எனக் கூறி தோப்பு இருப்பு பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பட்டியலின மக்கள், விநாயகர் சிலையை நடுரோட்டிலேயே வைத்துத் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது
விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்….
