Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை மலர் சந்தையில் ரூபாய் நோட்டுகளில் மாலை கட்டும் பணி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சை மலர் சந்தையில் ரூபாய் நோட்டுகளில் மாலை கட்டும் பணியில் பூக்கள் விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட பூக்களின் விலை பல மடங்கு அதிகமாக விற்கப்படும் ஆனால் விநாயகர் சதுர்த்தி யான இன்று வழக்கமான நாட்களில் விற்கப்படும் விலையில் பூக்களின் விலை இருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பூஜைக்கான பூக்களை வாங்கிச் சென்றனர்

வழக்கமாக பண்டிகை நாட்களில் பூக்களின் விலை பல மடங்கு அதிகமாக விற்கப்படும்

பண்டிகை நாட்களில் பூக்களின் தேவை அவசியம் என்பதால் விலை கூடுதலாக விற்பனை செய்தாலும் மக்கள் குறைவான அளவில் பூக்கள் வாங்கி செல்வார்கள்

ஆனால் விநாயகர் சதுர்த்தியான இன்று வழக்கமான நாட்களில் உள்ள விலை போல மல்லிகை கிலோ 600 ரூபாயும் சம்பங்கி கிலோ 500 ரூபாயும் செவ்வந்தி கிலோ 300 ரூபாயும் விற்கப்படுவதால் மக்கள் ஆர்வமுடன் கூடுதலாக பூக்கள் வாங்கிச் சென்றனர்

மேலும் ரூபாய் நோட்டுகளில் மாலை கட்டும் பணியில் பூக்கள் விற்பனையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

error: Content is protected !!