Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து சாவு…. திருச்சி க்ரைம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

ஓடும் பஸ்சில் ரூபாய் 50 ஆயிரம் பணம் திருட்டு

புதுக்கோட்டை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி வயது 57 இவர் தனது மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க வாய் 50 ஆயிரத்தை தனது ட்ரவுசர் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு புதுக்கோட்டையில் இருந்து திருச்சி பால் பண்ணைக்கு வந்தார். சம்பவத்தன்று இவர் பால்பனையிலிருந்து காந்தி மார்க்கெட் செல்வதற்காக ஒரு டவுன் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது தனது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர் யாரோ பிளேடால் கிழித்து திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில்

கூலித் தொழிலாளர் வீட்டில் இரண்டு பவுன் நகை திருட்டு

திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 44.) இவர் காந்தி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி  இவர் தனது தாயே பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் செங்குளம் காலனிக்கு சென்றிருந்தார். மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை யடுத்து அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள்  
யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் பாலக்கரை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து சாவு

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய் என்ற ஜானகிராமன் வயது 47. இவர் எடமலை பட்டி புதூர் போலீசாரால் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதியில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று ஜானகி சிறையின் உள்ளே மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்த சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை சிறை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு ஜானகிராமனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!