திருச்சி பாலக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்க பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த அசோக் குமார் (வயது 45,) ஈஸ்வரன் (வயது 46), அருண்குமார் (வயது41), குணா (வயது29), மணிகண்டன் வயது34), மணிகண்டன் (வயது38), ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதே போல் குஞ்சான் கொள்ளை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தியதாக ஜீவானந்தம் 66, அரியமங்கலத்தைச் சேர்ந்த தனபால் 52, பால் பண்ணை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்60, மரக்கடையை சேர்ந்த இளங்கோவன் 67, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த குணசேகரன் 45, தாமோதரன் 57 ஆகிய ஆறு பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 4790 பணம், சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்திய கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில்
புகையிலைப் பொருட்களை விற்ற வாலிபர் கைது
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே தமிழக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பிராட்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரதாப் ரோஷன் (வயது19) என்பவரை கண்ட் டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.
