திருச்சி,கண்டோன்மென்ட் பகுதியில் கன்சல்டன்சி நடத்தி வருபவர் மணிவண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளார். அதை நம்பிய குமாரவேல், வேலைக்காக ரூ4லட்சத்து
75 ஆயிரம் பணத்தை மணிவண்ணனிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, குமாரவேலை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார் மணிவண்ணன். பிறகு அங்கு கிடைத்த வேலை திருப்திகரமாக இல்லாததால், குமாரவேல் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.
அதன்பின்னர், மணிவண்ணன் ரூ3 லட்சத்தை குமாரவேலிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ1,75,000 பணத்தை குமாரவேல் திரும்பக் கேட்டபோது, அதைத் தர மறுத்து ஏமாற்றியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நிலுவைத் தொகையான ரூ1,75,000 ஏமாற்றிய மணிவண்ணன் மீது கண்டோன்
மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைநடத்தி வருகின்றனர்
