திருச்சியில் நடைபெறும் விவசாய சங்க போராட்டத்திற்கு செல்ல இருக்கும் விவசாயிகளை போலீசார் தடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
திருச்சியில் நாளை நடைபெறும் 40 விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக தமிழக அரசின் கடன் தள்ளுபடி அறிவித்திருப்பது ஏற்க முடியாத ஒரு சூழ்நிலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருக்கின்ற நிலையில் நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு ஊராட்சி தோழகிரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 50 பேர் திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செல்வதாக இருந்த நிலையில் இன்று இரவு எங்களுடைய கிராமத்தில் வந்து காவல் துறையினர் போராட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று கூறி எங்கள் கிராமத்திலேயே இரவு தங்கி இருக்கின்றார்கள். விவசாயிகள் ஜனநாயக உரிமைக்காக போராடுவதற்கு உரிமை இல்லை என்று கூறுவது தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
