Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார் பேரறிஞர் அண்ணா!-உதயநிதி புகழ்

தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார் பேரறிஞர் அண்ணா!-உதயநிதி புகழ்

உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று. கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் – அண்ணா!

தமிழ்நாடு என்று பெயர் சூட்டி – சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து – இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் – இன்றைக்கும் – என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் – தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் – மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார். வாழ்க அண்ணாவின் புகழ். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!