முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் அண்ட் யங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
