புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராக சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டம் தொடங்கியது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட 9 மீனவ கிராமங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராக சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டம் தொடங்கியது. புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து படகுகளில் கருப்புக் கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
மீனவ மக்களின் வாழ்வுரிமை மற்றும் நில உரிமையை பாதுகாக்க வேண்டும். புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் மீனவ மக்களின் பூர்விகக் குடியிருப்பு உரிமைகள் பறிபோகும் எனவும் வேதனை தெரிவித்தனர். இதனிடையே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் மற்றும் முள்ளிமாநகர் மீனவ கிராம பஞ்சாயத்து சபைகள் சார்பில் மீனவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சற்று நேரத்தில் பட்டினப்பாக்கம் முள்ளிக்குப்பம் சமூக நலக்கூடம் எதிரில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நைனார்குப்பம் வரையிலான அனைத்து மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
புதிய தலைமைச் செயலக கட்டிடம் அமைப்பதற்கான அரசாணை, 9 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே, அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக மீனவ சங்க வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
