Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் கனமழை

கரூர் மாவட்டத்தில் காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

திடீரென பெய்த கனமழையால் கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூரில் பெய்த இந்த திடீர் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!