மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ‘கோப்ரா’ கமாண்டோ படை பிரிவின் புதிய ஐ.ஜி.யாக 2006-ம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரி சஞ்சுக்தா பராசர் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம், காடுகளில் நக்சலைட்டுகளை வேட்டையாடும் இந்த சிறப்பு கமாண்டோ படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார். ‘அசாமின் இரும்பு பெண்மணி’ என்று அழைக்கப்படும் இவர், போடோ தீவிரவாதிகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமையில் ஆற்றிய சிறப்பான சேவைகளை தொடர்ந்து தற்போது இந்த முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
