பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜை – 200-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் ஆலயத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கட்சி நிர்வாகிகள்,

தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 200-

க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
