திருச்சி அதிகாரியின் டூவீலர் திருட்டு
திருச்சி சுப்பிரமணியபுரம் ஹவேஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (82 ) இவர் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவில் ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு
திருச்சி திருவரங்கம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 75). இந்த நிலையில் இவர் கடந்த 9-ந்தேதி வீட்டில் மாடியில் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீது சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம்
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் ( 35) . கடந்த 17 ம் தேதி திருச்சியில் இருந்து திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கேயிருந்து உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி கேட்பாரற்று கிடந்த 28 கிலோ புகையிலை பொருட்கள்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு கடந்த 16ந் தேதி இரவு புரூளிலாவில் இருந்து திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ் வந்தது. இந்த ரெயில் நடைமேடை 4-ல் வந்து நின்ற போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அன்புச் செல்வன் ரெயில்வே போலீசார் உதவியுடன் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார். இது குறித்து அவர் கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
