உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் தண்டவாளத்தை கடக்க மறுத்து ஒரே இடத்தில் நின்ற 30-க்கும் மேற்பட்ட ஆடுகள், அதிவேகமாக வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தன. ஆபத்தை உணர்ந்த ரயில்வே கேட்மேன் உடனடியாக கூச்சலிட்டு தொடர் எச்சரிக்கை விடுத்ததால், ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
