பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி திருச்சி அருகே விவசாயிகள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரவு பகலாக அவர்களது போராட்டம் நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரம் பள்ளிவிடை பாலம் சர்வீஸ் சாலை அருகே விவசாயிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.
இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், உழவர் உரிமை இயக்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு உள்பட 40 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் விவசாயிகள் இரவு பகலாக அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
