தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கட்டண முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் ‘104’ என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இப்பிரச்சினைகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தமிழகத்திலுள்ள 45 சுகாதார மாவட்டங்களின் அடிப்படையில் 12 ஒருங்கிணைப்பாளர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
