திருச்சி மாவட்டம் வையம்பட்டி கம்பளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பால்ராஜ் (வயது 56). மதுவுக்கு அடிமையான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதையடுத்து அவரது மனைவி சவரி அம்மாள் மதுப்பழக்கத்தை விட்டுத் தொலையுங்கள் என கூறி கணவரை கண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வின்சென்ட் பால்ராஜ் மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார் பின்னர் செக்கனம் கிராமத்தில் உள்ள
ஒரு விவசாய தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு வையம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் வின்சென்ட் பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது மனைவி சவரி அம்மாள் வையம்பட்டி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி பஸ் நிலையத்தில்
முதியவர் பிணம்
திருச்சி செப். 17 –
திருச்சி மாவட்டம் முசிறி பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது பற்றி முசிறி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி முசிறி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
