திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். இதற்கிடையில் விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற வாலிபரை மாநகர மதுவிலக்கு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..
