Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆம்னி பஸ் கவிழ்ந்து 5 பேர் காயம்- டூவீலரில் வந்த 2 பேர் படுகாயம்

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த 15 பேர் பெங்களூருவில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆம்னி பேருந்தில் மீண்டும் சின்னதாராபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

சேலம்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மலையம்பாளையம் அருகே பேருந்து சென்றபோது முன்னால் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் திடீரென ஒன்றோடு ஒன்று

மோதிக்கொண்டன. இதில் இருசக்கர வாகனங்களில் சென்ற இருவரும் சாலையில் விழுந்தனர்.

அவர்கள் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்தை திருப்பியதால்

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பேரில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக சேலம்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!